30.6 C
Colombo
Saturday, October 10, 2026

சிறுவன் செலுத்திய கார் மோதி 4 வாகனங்கள் சேதம் ஒருவர் பலி – சிறுவனும் தந்தையரும் கைது.

16 வயதுச் சிறுவன் செலுத்திய காரொன்று 4 வாகனங்களை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும் கார் ஒன்றையும் மோதியது.

சிறுவன் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்தது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவனும் அவருடைய தந்தையாரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles