சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபன தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேனவுடன் அமைச்சர் கெஹெலிய கொண்ட கருத்து முரண்பாட்டையடுத்து , கூட்டுத்தாபன தலைவர் தமது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியிருந்தார்.
ஆனால் அதனை ஏற்காத ஜனாதிபதி , டாக்டர் குணசேனவை மேலும் ஒருமாதகாலம் பொறுக்குமாறு கேட்டுள்ளார்.
இந்த நிலைமையில் அமைச்சின் கடமைகளை செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்தில்கொண்டு , அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய கெஹெலிய ரம்புக்வெல ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாரம் இது தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுவதால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

