கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் தயக்கம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஸ்ரீலங்காவின் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவிக்கையில், இலங்கையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைவாகவே உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த தடுப்பூசிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை இல்லாமல், விரைவில் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்றார்.
அதேவேளை,மாணவர்கள் தடுப்பூசியை விரைவில் பெற்றால், விரைவில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

