ஆப்கானிஸ்தானின் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தின் பண்டார் கான் அபாத் மாவட்டத்தில் ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்தே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷியா முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமையான இன்று பிற்பகல் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டு இருந்த போது மசூதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இதன் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


