கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
முன்னதாக கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் 12 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

