28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது – இலஞ்சம் கொடுக்கவும் முயற்சி!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமிருந்தும் 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கைதானவர்கள் இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை அரசியல் கட்சியொன்றின் யாழ் மாநகர சபை உறுப்பினர் என்றனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles