மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தொடர் இன்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுவதின் முன்னேற்றம் தொடர்பிலும் 20 – 29 வயது பிரிவுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த இரண்டு வாரத்துக்குள் முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் நாடளாவியரீதியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு தமது அர்பணிப்பை வழங்கிய சுகாதார தரப்பு,இராணுவத்தினர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

