29.5 C
Colombo
Friday, August 21, 2026

ஜனாதிபதி அனுர ஜப்பான் விஜயம்!

 

அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 25 ஆம் திகதி இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles