இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் 40 – 50 என குறைந்த வயதிலேயே பக்கவாதம் (பாரசிசவாதம்) ஏற்படுகிறது என தெரிவித்த வைத்தியர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும் என்றார்.
பாரிசவாதம் தொடர்பான விசேட கருத்தரங்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று ஆரம்பமாகியது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், பக்கவாதம் தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. உலகத்திலேயே இரண்டாவது அதிக இறப்புக்கள் ஏற்படுவதற்கான காரணமாக பக்கவாதம் காணப்படுகிறது. பக்கவாதத்தின் மூலம் திடீரென ஒருவருக்கு ஒரு பக்கம் இயங்காமல் போய்விடும், கண் தெரியாமல் போவது, கால் இயங்காமல் விடுவது, ஞாபக சக்தி இல்லாமல் போவது, நடப்பது சிரமம் என பல விடயங்கள் ஏற்படும்.
இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் 40 – 50 என குறைந்த வயதிலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. இதேவேளை மேலைத்தய ஐரோப்பிய நாடுகளில் 70 மற்றும் 75 வயதுக்கு பிறகே இந்த பக்கம் வாதம் வருகிறது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்களிடையே உள்ள இரத்தக் கொதிப்பு, குருதியமுக்கம், நீரிழிவு உடற்பருமன், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமின்மை ,துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை, மதுபானம் மற்றும் சிகரெட் பாவனைக்கு அடிமையாதல் போன்றவற்றினால் பக்கவாதம் ஏற்படலாம்.
உலகத்திலேயே பக்கவாதத்திற்கு வைத்தியங்கள் இருக்கின்றது. முதலில் பக்கவாதம் ஏற்பட்டவுடன் அது தொடர்பில் சிரி ஸ்கான் உள்ள சிறந்த வைத்தியசாலை நாட வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, குருதி பரிசோதனையை செய்ய வேண்டும். நல்ல ஆரோக்கியமான சத்தான ஆகாரம் மற்றும் உடற்பயிற்சிகளை செய்து கொள்ளல், பழங்கள் காய்கறிகளை உண்ண வேண்டும், அசைவ உணவுகளை எண்ணெயை குறைத்து உண்ண முடியும்.யாருக்காவது பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்து சாலை நாடி சிகிச்சை பெற வேண்டும் – என்றார்.
இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான வைத்தியர் அஜந்தா கேசவராஜா, இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் ஆதரவுடன் உலக பாரிசவாத அமைப்பின் அனுசரணையுடன் இலங்கை தேசிய நரம்பியல் சங்கம், யாழ்ப்பாண மருத்துவ சங்கம், மட்டக்களப்பு மருத்துவ சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் பாரிசவாதம் சம்பந்தமான கல்வியூட்டல் நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது மூன்று நாள் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நிகழ்வு. இன்று முதல் நாள் விழா 250 இலிருந்து 300 வரையான வைத்தியர்கள் தம்மை பதிவு செய்து இந்த கருத்தரங்கில் மிக உற்சாகமாக இணைந்து இருக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு பாரிசவாத நிபுணர்கள் 10 பேரும் உலக பாரிசவாத சம்மேளனத்தின் 15 பேரும் கலந்து பேச்சாளர்களாக செயற்படவுள்ளனர் – என்றார்.

