27.8 C
Colombo
Friday, August 21, 2026

2 மாதங்களில் 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் மே 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு கொண்டுவரப்பட்ட  1,758 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் அதில் அடங்குகின்றது.

இந்த போதைபொருட்களுடன் 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் தொகையின் பெறுமதி 10.84 பில்லியன் ரூபாவாகும்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 12.16 பில்லியனாகும்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு முன்னெடுத்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles