28.9 C
Colombo
Friday, August 21, 2026

பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியானது!

பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021ம் ஆண்டிற்கு பின்னரான காலத்தில் பிறந்த குழந்தைகளது பிறப்புச் சான்றிதழ்களும் புதியவகை பிறப்புச் சான்றிதழுக்கு மாற்றப்படவேண்டுமென அரசால்ல் கட்டாய அறிவிப்பு விடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல் போலியானது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் புதிய பிறப்புச் சான்றிதழை இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிரசுரித்துவருவதாகவும், அதில் நபரின் தகவல் ஆங்கிலம், சிங்கள மொழிகளில் மாத்திரம் காணப்படுவதாகவும் நபரொருவரின் பிறப்புச்சான்றிதழை அடையாளப்படுத்தி செய்திகள் வெளிவந்தன.

புதிய பிறப்புச்சான்றிதழ் முறைமையானது சில பிரதேச செயலகங்களில் பரீட்சார்த்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதொன்றாகும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles