இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
நாளை விமானம் மூலம் எடுத்து வரப்படும் மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு நாளை வியாழக்கிழமை (04) காலை 9 மணி முதல் 10 மணி வரை மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தந்தை செல்வா கலையரங்கிலும் அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) மதியம் 3.30 மணி முதல் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் கட்சி தலைமையகத்தில் மறைந்த சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.
இதேவேளை இரா.சம்பந்தனின் பூதவுடலை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், மக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

