25 C
Colombo
Thursday, October 8, 2026

மிக்சருக்குள் பொரித்த பல்லி – யாழில் வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்சருக்குள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles