My Dream Academy – DP IT Campus கற்கை நிறுவனத்தில் கோடிங் கற்கை நெறியில் கற்போருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி காலை 8 மணியளவில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
யாழ் மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும் இலவசமான கோடிங் கற்கைநெறி வகுப்புகள் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினது டிபி எடியுகேசன் அறக்கட்டளையும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ”என் கனவு யாழ்” அறக்கட்டளையும் கைகோர்த்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக கணணி கற்கையை இலவசமாக இளையோருக்கு வழங்குவதறாகாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

