யாழ்ப்பாணம் – அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பகுதியில் உள்ள பண்ணையொன்றில் பெருமளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (02)இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகளவு மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக வந்தவர்கள் பண்ணையில் உள்ள வீட்டில் பெருமளவு சேதங்களை ஏற்படுத்தி தீவைத்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த பண்ணைக்கு வந்த சிலர் அங்கு நின்ற ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன் பகையே குறித்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

