நாளைய தினம்(03) புதிதாக கடமையைப் பொறுப்பேற்க உள்ள ஆசிரியர்கள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (04) தமது கடமைகளை பொறுப்பேற்குமாறு வடமாகாண கல்வி பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை(03) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதுடன், குறித்த பரீட்சை தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை(03) நாடளாவியரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

