29.5 C
Colombo
Friday, August 21, 2026

ஐ.தே.க. மே தின கூட்டத்துக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்!

கொழும்பில் இடம்பெறவுள்ள  ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஆதரவாக யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் குறித்த மேதின  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன

யாழ் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின்  ஏற்பாட்டில் மேதின அழைப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மே முதலாம் திகதி கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெறவுள்ள மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளதோடு எதிர்வரும் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பினையும் குறித்த கூட்டத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே தின கூட்டத்தில் நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளநிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles