வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என அடையாளம் கண்டுகொண்ட ஆறு பேரை வவுனியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

