யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் இன்று மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
காணொளியை பார்க்க….
https://fb.watch/rrCz7JofKu/?mibextid=RtaFA8
தேர்த்திருவிழாவில் பெருமளவான அடியவர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் கடாட்சத்தினை பெற்றுக்கொண்டனர்.
நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா!
https://t.co/G0SzcZ0yNe#jaffna #nallur #pillayar pic.twitter.com/2BjZaw9g8K
— Jaffnagallery News (@JaffnaGallery) April 14, 2024
கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.
அடியவர்கள் அங்கபிரதட்டை, கற்பூரச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

