யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் கடற்படையினர் இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பொன்றை முன்னெடுத்து மருதங்கேணி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கணவாய் மீன் பிடிப்பதற்காக இலைகுழைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகை வெற்றிலைக்கேணியில் கடற்படை வழிமறித்து கைது செய்துள்ளனர்.
இதே வேளை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டிலும் ஒருவர் நேற்று கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நேற்று (13) கட்டைக்காடு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் அண்மை நாட்களாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

