29.5 C
Colombo
Friday, August 21, 2026

வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய இளைஞர்கள் விளக்கமறியலில்!

வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த தன்னை வழிமறித்து இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாக , தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஐந்து இளைஞர்களை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , ஐவரையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles