32.2 C
Colombo
Friday, October 9, 2026

வவுனியா – வீரபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா – வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கும் அயலவர்கள் முறைப்பாடு செய்தனர்.

அப் பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles