29.5 C
Colombo
Friday, August 21, 2026

ரணில் – பொன்சேகா டீல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த பின்னர் சுமார் ஒரு மணிநேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் என்ன பேசப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி விஞ்ஞாபனத்தை முன்வைத்த போது, அதனைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த போதிலும், சரத் பொன்சேகா உட்பட அக்கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் அறிக்கையை செவிமடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles