28.9 C
Colombo
Friday, August 21, 2026

அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள கஜேந்திரகுமார் எம்.பி.!

அமெரிக்காவிற்கு சென்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.

அந்தவகையில் அமெரிக்கா பாராளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களில் அக்கறை செலுத்தி செயற்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான விலே நிக்கல், டொபரஞ் ரோஸ், ஜெமி ரஸ்கின், டனி கே டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள். அமெரிக்கா காங்கிரஸ் பாராளுமன்றத்தில் தமிழர் தேசம் தொடர்பாக பல தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles