32.2 C
Colombo
Friday, October 9, 2026

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு இந்திய கலைஞர்கள் பலரும் விரும்புவதில்லை!

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு இந்திய கலைஞர்கள் பலரும் விரும்புவதில்லை. அவர்களை சமாளித்தே இங்கு அழைத்து வருகிறோம் என ஹரிஹரன் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் நொதேர்ன் யுனி நிறுவுனர் இந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டு குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே நொதேர்ன் யுனி நிறுவுனர் இந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

காணொளியாக பார்க்க……

https://fb.watch/q1_9c-QRKH/

எமது சமூகத்தில் கல்வி மிக முக்கியமானது. அதற்காக நொதேர்ன் யுனியை ஆரம்பித்தோம். யுத்தத்தின் பின்னர் இங்கு பெரியளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை.ஒரு சமூகம் முன்னேற கல்வி பொருளாதாரம் மட்டும் போதாது. பொழுதுபோக்கும் முக்கியம்.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினாலும் யாழ்ப்பாணத்திற்கு மட்டும் உரிய இசை நிகழ்ச்சி அல்ல இது. எந்த தமிழரும் இலங்கை, இந்தியா , உலகம் என எங்கிருந்தும் வரலாம்.

40000ற்கும் மேல் இலவச அனுமதி சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் விஜபி அனுமதிக்கு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக பதிவு செய்தவர்கள் நின்று இசை நிகழ்ச்சியை பார்க்கும் போது
இலவசமாக விஜபி அனுமதியை வழங்கமுடியாது. ஆகவே விருப்பமுள்ளவர்கள் பணம் கொடுத்து விஜபியாக அமர்ந்து பார்க்கலாம்.

நிகழ்ச்சிக்காக பெருந்தொகை செலவு செய்யும் பணம் செலவிடப்படுகிறது. விஜபி அனுமதி மூலம் பெறுப்படும் பணம் எங்கோ இருக்கிறது. குறித்த பணம் எதுவும் நாம் எடுக்கப்போவதில்லை. அது கல்வி அறக்கட்டளைக்கே வழங்கப்படும்.

பணம் இருந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்த முடியாது. எத்தனையோ கலைஞர்களை ஒருங்கிணைத்து இங்கு அழைத்து வருகிறோம். அது சாதாரண விடயமல்ல. கலா மாஸ்டர் மூலமே இது சாத்தியமானது.

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு பலபேருக்கு உடன்பாடில்லை. முதன்முதலில் யாழ்ப்பாணத்திற்கு அதிக கலைஞர்களை ஒருவாறு சமாளித்தே அழைத்து வருகிறோம். ஆகவே இதனை ஊக்கப்படுத்தி பலரும் பங்கேற்கும் போது தொடர்ந்தும் கலைஞர்கள் வருவார்கள் – என்றார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles