24.5 C
Colombo
Thursday, October 8, 2026

வலிகாமத்தில் 13 பேருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 13 பேரிற்கு  எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட ஆனைக்கோட்டை, மானிப்பாய் மற்றும் சுதுமலை பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அடையாளம் காணப்பட்ட 13 வீட்டு உரிமையாளர்களிற்கு எதிராக இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப் பணம் அறவிடப்பட்டதுடன் , இனிவரும் காலங்களில் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால்  சிறைத்தண்டனை விதிக்கப்படும் என  மல்லாகம் நீதவான் எச்சரித்து விடுவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles