28.9 C
Colombo
Friday, August 21, 2026

புதுமொழியை கற்பது சுற்றுப்புறங்கள் பற்றி புரிய உதவும் – ஹிந்தி தின நிகழ்வில் இந்திய துணைத் தூதர்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உலக ஹிந்தி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தியா கோனர் அதிகாரிகள் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளின் ஹிந்தி கற்கும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,.உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றான இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார், ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது பொருளாதார வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் தனது உரையில் துணைத் தூதர் பேசினார்.

இந்தியன் கோனரில் ஹிந்தியில் பயின்று வரும் வடமாகாண தமிழ் மாணவர்களைப் பாராட்டிய துணைத் துதர், மொழியைக் கற்றுக்கொள்வது மக்களைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், மொழியுடன் தொடர்புடைய கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.மற்றும் பயிற்றுவிக்கும் ஊடகத்திலிருந்து வேறுபட்ட ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் சுற்றுப்புறங்களைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற உதவும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலாசார நிகழ்ச்சிகள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய உரைகள், இந்தியா கோனர் மாணவர்களின் பாடல் மற்றும் நடனம் ஆகியவை இடம்பெற்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles