காணொளியாக பார்க்க……
https://fb.watch/pDkQ959fpo/?mibextid=RtaFA8
பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (17) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
மதியம் 12 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இந்த நினைவு தினம் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவு தினத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
2001 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்குதமிழில் தமிழ் மக்களின் அபிலாசைகளான, சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

