காணொளியாக பார்க்க….
https://fb.watch/pA_0hJDhjf/?mibextid=RtaFA8
யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதுடன் கைக்குண்டும் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஞாயிற்றுக்கிழமை (14) திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்தபோது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டது.
குறித்த சந்தேநபரிடம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் சந்தேக நபரிடம் இலத்திரனியல் உபகரணங்கள்,சமையல் உபகரணங்களை கொள்வனவு செய்த சாவகச்சேரியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரையும் பொலிசார் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

