பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன புதன்கிழமை(03) கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், இச் சந்திப்பின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை(04) வடக்கு மாகாணத்திற்கு சுற்றுபயணம் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

