25.6 C
Colombo
Wednesday, October 14, 2026

சிகரெட் மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

வற் வரி திருத்ததிற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மது வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles