29.5 C
Colombo
Saturday, October 10, 2026

13 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம், அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மறுநாள், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை டிசம்பர் 21வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அந்த வழக்கு நேற்று(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 மீனவர்களுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 6 மாத சிறைத்தண்டனை விதித்த மன்று, அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்தது.

அதேவேளை, மூன்று படகுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த மன்று, அன்றைய தினம் படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles