28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் மாவட்டத்தில் 102 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேருமாக 102 பேர் இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரையிலான ஒரு வார காலம் நாடு முழுவதும் விசேட வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யவும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும் இவ் விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles