28.9 C
Colombo
Friday, August 21, 2026

பலபிட்டியவில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்!

பலபிட்டியவில் கரையொதுங்கிய 29 வயது பெண்ணின் சடலம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 18ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் நேற்றிரவு(20) பலபிட்டியவில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

29 வயதான அஹுங்கல்ல பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாயின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 9 நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles