28.9 C
Colombo
Friday, August 21, 2026

பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இணையத்தை பயன்படுத்தி பௌத்தம் மற்றும் புத்த மதத்தை அவமதிக்கும் சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையத்தைப் பயன்படுத்தி பௌத்த பெயர்களில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் பௌத்தம் மற்றும் புத்தரை அவமதிக்கும் வகையிலான பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles