28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை – 252 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles