29.5 C
Colombo
Friday, August 21, 2026

ஹரிஹரனின் யாழ் இசை நிகழ்ச்சி டிசம்பர் 21 ரத்து?

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இடம்பெற்று வருகிறது.

NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேடை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் இசை நிகழ்ச்சியின் புதிய திகதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles