24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

வலிகாமம் வடக்கில் இன்று முதல் காணி அளவீட்டுக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம்(15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளராலா இந்த பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்யப்படவுள்ளது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இன்று முதல் தொடர்ச்சியாக அளவீடு இடம்பெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles