25 C
Colombo
Saturday, October 10, 2026

கிளிநொச்சியில் பிரபல உணவகத்துக்கு சீல்!

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் உணவகம் ஒன்றை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று(13)சுகாதார பிரிவினர் சீல்வைத்து பூட்டினர்.

ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தவே பார்வையிட்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த உணவக
உரிமையாளருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்
உணவகத்தை தற்காலிகமாக மூட பணித்தார். இதனையடுத்து உணவகம் பொதுச் சுகாதார பரிசோதகரால் சீல் வைத்து மூடப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles