32.2 C
Colombo
Friday, October 9, 2026

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமனம்!

பதில் பொலிஸ் மா அதிபராக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 29.11.2023 முதல் 03 மாத காலத்திற்கு உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் தனது முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles