28.9 C
Colombo
Friday, August 21, 2026

மின் வடத்தில் தீப்பற்றியமையால் கோப்பாயில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் தீப்பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.

கோப்பாய் , இராச பாதை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதான மின் வடத்தில் தீ பற்றியதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர்.

பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles