29.5 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் மேலும் நால்வர் கொரோனாக்கு பலி! முடிவுக்காக இரு சடலங்கள் காத்திருப்பு

யாழ்ப்பாணத்தில் மரணித்த நால்வருக்கு இன்று (7) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்,

கரவெட்டியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா தொற்று காரணமாக பருத்தித்துறை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் உயிரிழந்தார்.

சுப்பர்மடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் இரண்டு நாள்களாக வயிற்ரோட்டம் காரணமாக சுகயீனப்பட்டிருந்த அவர் இன்று வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்ட போது உயிரிழந்துள்ளார். வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் உயிரிழந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது அயலில் கொரோனா தொற்றாளர்கள் உள்ள நிலையில் சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை,

மந்திகை வைத்தியசாலை சவ அறையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை சந்தை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் உயிரிந்துள்ளார். அவரது அயலில் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், பருத்தித்துறை பேருந்து நடத்துனரான 58 வயதுடைய ஆண் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles