தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க் கண்காட்சி இம் முறையும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) ஆரம்பமானது.
இக் கண்காட்சி நடைபெறும் மலர் முற்றம் காட்சித்திடல் இன்று புதன்கிழமை (22) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
கௌரி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சிறப்புரைஞர்களாக வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக் கண்காட்சி இம் மாதம் 30ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.


