28.9 C
Colombo
Friday, August 21, 2026

ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தெரிவு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன்னாயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது அதற்கு அமைவாக யாழ் மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நேற்று மதியம் யாழ் நகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது .

இதன்போது ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஐனா கருணாகரம், ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள், யாழ்மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

நிர்வாகத் தெரிவில் யாழ் மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் யாழ் மாநகர துணை மேயர் து. ஈசன் தெரிவாகியதுடன் 37 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles