29.5 C
Colombo
Friday, August 21, 2026

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுப்பணி!

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய  தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி இன்று(20) அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. இவ் அகழ்வு பணியின்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிசார், சிறப்பு அதிரடிபடையினர் முன்னிலையாகி இருந்தனர்.

இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் பொது எந்தவித்தடையங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியான பணி எதிர்வரும் 22.10.2023 அன்று 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles