பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டாவது பதவிக்கால நீடிப்பு, கடந்த 09ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

