28.9 C
Colombo
Friday, August 21, 2026

பச்சிளம் குழந்தையின் தாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles