கொரோனா தொற்று பரவல் மீளவும் அதிகரித்து வரும நிலையில் எதிர்வரும் வார இறுதியில் பயணத்தடை அல்லது குறுகியகால முடக்கம் ஒன்றை அமுல்படுத்துவது தொடர்பில் அரசு ஆராய்ந்து வருவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி முதற்கட்டமாக, திருமண நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

