28.9 C
Colombo
Wednesday, October 14, 2026

யாழில் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் – கிடுக்கிப்பிடி போட யோசனை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நடைபெறுவதாகவும் அவை தொடர்பாக சுகாதாரத்துறை ,மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும் குழாய்க் கிணறுகள் அமைத்தல் குறிப்பாக நகரப்பகுதியில் குழாய்க் கிணறுகள் அனுமதி பெறப்படாமல், குறிப்பாக விடுமுறை நாட்களில் வகை தொகையின்றி மேற்க்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக விரைவில் விசேட கூட்டமொன்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் மேற்க்கொள்ளப்படுமென அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறே யாழ் நகரப்பகுதியில் வாகன சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக பெருமளவான நீர் பயன்படுத்தப்படுவதுடன் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles