நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டம் இடம்பெற்றது.
நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத்வீரசேகர உள்ளிட்ட எனையவர்களையும் கைது செய்,இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைரை உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து,உள்ளிட்ட கோஷங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொதுமகனொருவர் குளிர்பானம் கொடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை பிற்பகல் 4.30 மணியளவில் முடித்து வைத்தார்.

